Loading...

விஞ்ஞானரீதியான ஆய்வுகள் மூலமாக கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முடியுமா?

அது புதிர் போன்றது. எல்லாவிதமான தரவுகளையும் நீங்கள் ஒன்றுபடுத்திப் பார்க்கும்போது எப்படியான விம்பத்தைப் பெறமுடியும்?

நான் விஞ்ஞானரீதியான கண்டுபிடிப்புக்களைப் பயன்ப்படுத்தி கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடைதேட முயல்கிறேன்.

நாங்கள் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி நடைமுறை என்னவென்பதை விபரிப்போம்.

விஞ்ஞர்னக் கண்டடைவுகள் புதிர்களின் துண்டுகள் போன்றவை.

அவை எல்லாவற்றையும் ஒன்றாக்கும்போது

எப்படியான வாழ்க்கை பற்றிய உண்மையின் விம்பத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அதில் சில வரையறைகள் இருக்கின்றன.

கடவுளை எமது பரிசோதனையின் பகுதியாக வைத்து எம்மால் அறிந்துகொள்ள முடியாது.

கடவுள் இன்னுமொரு பரிணாமத்தில் இருக்கிறார்.

ஆனால் சிலர் “கடவுள் என்ற உருவாக்கம் எங்கள் சொந்தக் கற்பனையில் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள்.

ஆகவே நமது முதலாவது கேள்வி, ”கடவுள் இருக்கிறாரா?”

கடவுள் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.

அப்படியானால், வாழ்க்கை என்பது வெறும் சந்தர்ப்பத்தால் ஏற்பட்டது என்பதோடு, அது அர்த்தமில்லாத்து என்றாகிவிடும்.

அது உண்மையாக இருக்க முடியுமா?

முதலில் தரவுகளை அவதானிப்போம். நமது அகிலம் ”பிக் பாங்க்” என்ற பெருவெடிப்பால் உருவாக்கப்பட்டது.

ஒரு பெரும் சக்தியால் மட்டுமே இந்தப் பெருவெடிப்பை மேற்கொண்டிருக்க முடியும்.

எமது பூமி ஒப்பீட்டளவில் அண்டவெளியின் பாதுகாப்பான சூழ்நிலையுள்ள இடத்தில் அமைந்துள்ளது.

இந்த அமைவிடத்தில் நம் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான பல்வேறு காரணிகள் ஒருங்கமைந்துள்ளன.

எமது பூமியின் அமைவிட்மும் இயற்கையின் நியதிகளும் நிலைத்திருப்பது நன்கு தீர்மானிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலேயே என்பது உங்களுக்கு விளங்கும்.

எமது பரம்பரை அலகுகளின் வடிவமைப்புப்பற்றிச் சிந்தித்துப்பாருங்கள்.

அது தகவல்களின் சிக்கலான கூட்டாக உருவாக்கப்பட்ட ஒன்று.

அது, எப்படியான புரதப்பொருட்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வரையறுக்கிறது.

வெறும் ஒரேயொரு உடற்கலத்தில் மூன்னூறு முதல் ஐநூறு வரையான புரதச் சேர்க்கைகள் இருக்கின்றன.

அல்லது கண்ணைப் பாருங்கள். அது மிகச் சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறை. அதில் 40 உப பொறிமுறைகள் இணைந்து இயங்குகின்றன.

கோடிக்கணக்கான உடற்கலங்கள் இந்தச் செயற்பாட்டில் பங்குபெறுகின்றன. அந்தக் கட்டமைப்பு அற்புதமானது.

நுணுக்குக்காட்டியின் உதலியோடு எண்ணற்ற கட்டமைப்புக்களை மூளை, கண் மற்றும் பரம்பரை அலகுகளை எங்களால் அவதானிக்க முடியும்.

மிகக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட இந்த முறைகள் யாவும் ஏதோவொரு சந்தர்ப்பவசத்தால் உருவானவை என்று கூறுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அதாவது, ஒன்றுமில்லாமையிருந்து ஏதாவது ஒன்றை உருவாக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதேபோல, சந்தர்ப்பவசம் மிக அதிக எண்ணிக்கையிலான சிக்கலான பொறிமுறைகளை உருவாக்கியிருக்கிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

நாங்கள் அறிந்து வைத்திருப்பதைக் கொண்டு பார்த்தால், சிக்கலான பொறிமுறைகளை உருவாக்கப் பெரும் அறிவும் ஆற்றலும் தேவை என்பதை எங்களால் உணரமுடியும்.

தேர்மோடைனமிக்கின் இரண்டாவது விதி, பொறிமுறையொன்று காலம்செல்லும்போது சிக்கல்த்தன்மை குறைந்து செல்லும் எனறு கூறுகிறது.

ஆனால் இதில் பௌதீகப் பகுதியைவிட ஏழு மேலதிகமானவைகள் இருக்கின்றன.

தற்செயல் என்பது நாங்கள் காணும் அனைத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் விளங்கப்படுத்திவிடாது.

தற்செயல் என்பதன்மூலம் நிலைத்திருக்கும் எங்கள் தத்துவங்களையும் உண்மையையும் நீதியையும் காதலையும் விளங்கப்படுத்த முடியாது.

எனவே கடவுளின் இருப்பை விளங்கப்படுத்தவும் உணர்ந்துகொள்ளவும் சிறந்தவழி, நாங்கள் அவதானித்தவற்றின் உண்மைகளைத் தெரிந்துகொள்ளுதலாகும்.

பிரபல விஞ்ஞானியான அல்பேட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார்.

”கடவுள் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டதும் தமக்குள்ளே இயைந்துசெல்கின்றதுமான நிலைத்திருப்பவற்றின் ஊடாகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.”

இன்றைய காலத்தில் குறிப்பிடத்தக்களவு விஞ்ஞானிகள், உயர் அறிவுக்கூர்மையுள்ள ஏதொவொன்று எங்கள் வாழ்க்கையில் வடிவமைப்பு மற்றும் ஒழுங்கமைப்புக்குப் பின்னால் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அந்த உயர் அறிவுக்கூர்மை என்பது கடவுளுக்குச் சொந்தமானது.

இந்த உலகின் பெரும்பான்மையான மக்கள் தம்மை உருவாக்கியவர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புகிறாகள்.

ஆனால், இங்கே ஏராளமான மதங்கள், கடவுளைப்பற்றி வித்தியாசமாக எழுதியவர்களின் கதைகளால் உருவாகியுள்ளன.

மூன்றாவது பகுதியில் மதத்தின் நம்பகத்தன்மையை எவ்வறு நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்பதை விளக்குகிறேன்.

குறிப்பாக, கிறிஸ்தவத்தின மீதான நம்பிக்கையின் பெறுமதியை வெளிப்படுத்துகிறேன்.

இந்த இரண்டாவது பகுதியை பார்த்த்தற்கு நன்றி. மீண்டும் நாங்கள் பகுதி 1 அல்லது 3 இல் சந்திப்போம் என்று நம்புகிறேன்.

வாழ்க்கையினதும் சமயத்தினதும் குறி (3a)
2018-12-11T13:15:57+00:00

Pin It on Pinterest

Share This