அறிமுகம்
நீங்கள் குதிக்கும்போது உங்களுடைய வேலையைக் கவனியுங்கள்.
இது குதிப்பதற்குச் சிறந்த தினமாகும்.
கடவுள் மீதான நம்பிக்கையும் இப்படியாகவே உண்மையானதாகும்.
நீங்கள் சரணாகதியடைய முன்னர் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காணொளியில் நான் கடவுள் குறித்த உண்மையை எப்படிக் கண்டறிந்தேன் என்பதை விளக்கப்போகிறேன்.
பட்டமளிப்பும் கார் விபத்தும் (ஜூன் 1989)
என்னுடைய 18 ஆவது வயதில் 1989ம் ஆண்டு ஜூன் மாதம் நான் உயர்கல்விப் பட்டமளிப்பைப் பெற்றுக்கொண்டேன்.
என்னுடைய நண்பர் தன்னுடைய தந்தையின் காரில் சவாரி செய்வதற்கு என்னை அழைத்தார். நானும் அவருடன் சென்றேன்.
நாங்கள் மிக வேகமாக வாகனத்தை நீண்ட தூரத்துக்குச் செலுத்தினோம்.
நாங்கள் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது நான் பாதுகாப்பு இருக்கைப்பட்டி அணிந்திருக்கவில்லை.
எனக்கு எதுவும் நடக்கவில்லை. உடனடியாக அவசர மருத்துவ வாகனம் அழைக்கப்பட்டது.
அந்த மருத்துவ வாகனத்தில் நான் “எனக்கு எதுவும் நேராத்தற்கு கடவுளே உமக்கு நன்றி” என்று பிரார்த்தித்தேன்.
நியூயோர்க் பயணமும் கேள்விகளும் (ஜூலை 1989)
சில வாரங்களுக்குப் பின்னர் நான் நியூயோர்க் நகரத்துக்கு, என்னுடைய விடுமுறையைக் கொண்டாடப் பயணமானேன்.
அங்கு கொலம்பியாவைச் சேர்ந்த என்னுடைய முன்னாள் காதலியைச் சந்தித்தேன்.
நாங்கள் காதலில் விழுந்து மிக இனிமையான நாட்களை அனுபவித்தோம்.
பின்னர் நான் நெதர்லாந்துக்குத் திரும்பியபோது, “இந்த வாழ்க்கை என்பது என்ன?” என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.
காதல் என்றால் என்ன? ஏன் நான் வாழவேண்டும்? கடவுள் இருக்கிறாரா? யார் அவர்?
நான் ”ஆண்டவரே தயவுசெய்து உம்மைப்பற்றிய உண்மையைக் கண்டறிய எனக்கு உதவிசெய்யும்” என்று பிரார்த்தித்தேன்.
டெவென்டரில் கற்கை ஆரம்பம் (செப்ரெம்பர் 1989)
அதேவருடம் செப்ரெம்பரில் என்னுடைய இளமானிப் பட்டப்படிப்பை டெவன்டரில் ஆரம்பித்தேன்.
ஒக்டோபர்/நவம்பர் 1989
சிறிது காலத்தின் பின்னர் நான் கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தபோது காட்டுத்தனமான ஒரு முகத்தை என்னிடம் கண்டேன்.
நான் அதிர்ச்சியடைந்ததோடு பயந்தேன். என்னை ஏதோ ஒரு சக்தி அளவுக்கதிகமாகப் பாதித்திருந்த்து.
நான் அந்தக் கண்ணாடியில் என்னைக் காணவில்லை.
நான் “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்” என்று பிரார்த்திக்கத் தீர்மானித்தேன்.
ஒருசில நிமிடங்களில் நான் வழமைக்குத் திரும்பினேன்.
பின்னர் நான் “இந்தக் கடவுள் யார்?” என்று வியந்தேன்.
அவர் என்னை கார் விபத்திலிருந்து பாதுகாத்தார்.
இப்போது அவர், பார்க்கப்படாத உலகத்தில் தனக்கிருக்கும் அதிகாரத்தை நிரூபித்திருக்கிறான்.
நான், இந்து சமயம், பௌத்தம், கிறிஸ்தவம், ஜூதாயிசம், இஸ்லாம் போன்ற பல்வேறுபட்ட மதங்களைப் பற்றிப் படிக்கத் தீர்மானித்தேன்.
அதேநேரம், “ஆண்டவரே! உம்மைப்பற்றிய உண்மையைக் கண்டறிய தயவுசெய்து எனக்கு உதவிசெய்யும்” என்று பிரார்த்தித்தேன்.
கனவு (பெப்ரவரி – மார்ச் 1990)
அதன்பின்னர், ஒரு பகல்நேரத்தில் நாளன் ஒரு கனவு கண்டேன்.
நான் நீரில் படகாக மிதப்பதைக் கண்டேன்.
அந்தக் கனவின் செய்தி என்னவெனில் “ நீ உனது கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைக்கிறாய். ஆனால் உண்மையில் ஆண்டவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறாய்” என்பதாகும்.
அந்தக் கனவின் பின்னர் நான் கடவுளின்மீது அதிக ஈடுபாடும் பற்றும் கொண்டவனானேன். அதற்காக எந்த விலையையும் கொடுப்பதற்கும் தயாரானேன்.
கண்டடைதல்
1990ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி நான், என்னுடைய இரவு உணவை முடித்தபின்னர்,
என்னுடைய அறையில் கடவுளின் பிரசன்னத்தை நான் உணர்ந்தேன்.
அது மிகவும் அழகாக இருந்த்து. கடவுளின் அன்பு மிகவும் தூய்மையானது.
கடவுள் என்மீது அன்பாக இருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.
என்னுடைய இருதயத்தை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க நான் விரும்பினேன்.
நான் என்னை முழுமையாக ஒப்படைத்தபோது, அவர் என்னுடைய துயரங்களை எடுத்துக்கொண்டு கடவுளுடனான ஆழ்ந்த உள் அமைதியை எனக்களித்தார்.
அதன்பின்னர் பைபிள் உண்மையானது என்பதை நான் அறிந்தேன்.
ஏனென்றால், பைபிளில் “கடவுள் அன்பானவர் என்றும் யேசு கிறிஸ்துவே மீட்பர்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆண்டவருக்கும் எங்களுக்குமான எல்லையற்ற இடைவெளியை ஏற்படுத்தியிருந்த உங்களுடைய, எங்களுடைய பாவங்களுக்காக மரித்தார்.
யேசு கிறிஸ்துரவை என் வாழ்க்கைக்குள் நான் அனுமதித்தபோது,
அவர் தன்னுடைய பாவங்களிலிருந்தான மன்னிப்பையும் கடவுளின் அமைதியையும் தந்தையிடமிருந்து எம்மிடம் கொண்டுவந்தார்.
யேசு கூறினார் “நானே உண்மையாக இருக்கிறேன். நானே வழி, நானே வாழ்வு. என் மூலமாகவன்றி வேறு எந்த வழியிலும் யாரும் என் தந்தையிடம் வரமுடியாது.”
இறுதிப்பகுதி
நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
உண்மையைத் தேடுங்கள், கடவுளைத் தேடுங்கள் அவர் உங்களைக் கௌரவிப்பார்.
பகுதி ஒன்றைப் பார்த்தமைக்கு நன்றி. இதன் இரண்டாவது பகுதியையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று நம்ப்புகிறேன்.