உண்மையான புனித வாழ்க்கையை எப்படி வாழ்வது?
மதத்தின் பெறுபதி என்ன?
உண்மையை நாங்கள் எப்படிக் கண்டறிவது?
மக்கள் ஏன் மதத்தை நோக்கித் திரும்புகிறார்கள்.
அது பின்வரும் கேள்விகளுக்கான பதில்களாக அமையுமா?
நான் எங்கிருந்து வந்தேன்? நான் ஏன் வாழ்கிறேன்? நான் எங்கு செல்லப்போகிறேன்?
என்ன காரணமாக இருந்தாலும், ஒரு மதம் வழிகாட்டலையும் புனித வாழ்க்கையைக் கண்டறியும் நோக்கத்தையும் வழங்கவேண்டும்.
சிலவேளைகளில் நாங்கள் அனைவரும் எமக்குள்ளே ஒருவிதமான வெறுமையை உணர்கிறோம்.
அதன் காரணம் என்னவென்றால், நாம் எமக்கும் எப்பை உருவாக்கியவருக்கும் இடையிலான நெருக்கமான அந்நியோன்னியமான பிணைப்பைத் தொலைத்துவிட்டதுதான்.
அனைத்து ஆன்மீக நூல்களும் இந்த வெறுமையைக் கையாள்வது குறித்து விபரிக்கின்றன.
அதனை அடைவதற்கான வழியாக தெயவீக முடிவிடம் ஒன்றை அவை கூறுகின்றன.
எந்த முறையைப் பின்பற்ற வேண்டும்? எந்த வழியைக் கட்டாயமாகத் தொடரவேண்டும்?
எந்தச் சமயநூல் உண்மையாகவே கடவுள் கூறுவதைக் கூறுகிறது?
அப்படியான புத்தகத்தில் நாங்கள்,
- எம்மை உருவாக்கியவரான கடவுளைப்பற்றி மேலதிகமாக்க் கண்டறிய வேண்டும். இந்த்க் காணொளியில் கடவுளுக்கான காரணம் என்னவென்பதை நான் விளங்கப்படுத்தியிருக்கிறேன்.
- புராணக் கதைகளை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்.
கடவுள் தொடக்கமும் முடிவும் அற்றவர். எனவே அவர் மீதான நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே வரவேண்டும். - மேன்மையான சுதந்திரத்தைக் கண்டறியுங்கள். நிலையானதாக இருக்கும் இயற்கைத் தாயிடம் அதற்கான தடயங்கள் நிறைந்திருக்கின்றன.
- உண்மை மற்றும் நடைமுறைச் சாத்தியம் குறித்து வாசியுங்கள். அது உண்மையாக இல்லாவிடில் அர்த்தமற்றதாகி விடும்.
- நாங்கள் கடவுளின் தீர்ப்பை எங்கள் உள்ளார்ந்தவெறுமையிலும் எம்மை மையப்படுத்திய இயற்கையிலிருந்தும் கண்டடைய வேண்டும்.
ஏனெனில், கடவுளின் வாழ்க்கை, அன்பு மற்றும் பரிபூரணத்தில் நாங்கள் எதிர்பார்ப்பதும் இதுவாகத்தான் இருக்கும். - அமைதி மற்றும் அன்பை நோக்கி எங்களுடைய இருதயங்களை இட்டுச்செல்லும் வழியைக் கண்டறிய,
அன்பு உருவாக்கியவரை எம்முடன் இணைத்து வைத்திருக்கும். இதுவே எங்களை உருவாக்கியரின் நோக்கமாகவும் இருக்கவேண்டும். - நாங்கள் கடவுளின் குரலைக் கேட்கவேண்டும். அந்தப் புத்தகம் கடவுளிடம் இருந்து வந்த்தானால், அது எங்களுடன் பேசவேண்டும்.
பைபிள் அப்படியான ஒரு புத்தகமா? நாங்கள் குறித்த பகுப்புக்களை மிக நுணுக்கமாக ஆராயலாம்.
1. உருவாக்கியவர்.
கடவுள் வாழ்க்கையை உருவாக்கியவர் என்று பைபிளில் விபரக்கப்பட்டிருக்கிறதா?
பைபிள் கடவுளை இந்த உலகத்தையும் எம வாழ்க்கையையும் உருவாக்கியவர் என்று வெளிப்படுத்தியிருக்கிறது.
நாங்கள் உருவாக்கப்பட்டவர்கள். எனவே கடவுள் தன் அன்பையும் வாழ்வையும் எங்களோடு பகிர்ந்துகொளவார்.
நாங்கள் அனைவரும் உண்மையான அன்பையும் மகிழ்வையும் பெற்றுக்கொள்ள விருப்பமுடையவர்கள்.
நாங்கள் அனைவரும் மதிக்கப்படவும் அன்பு செலுத்தப்படவும் வேண்டும் என்று விரும்புகிறோம். அதையே கடவுள் உருவாக்கியிருக்கிறார்.
ஆனால், பெரும்பாலும் நாங்கள் அந்த அன்பை பொருத்தமற்ற இடத்திலிருந்து பெற்றுக்கொண்ண முயற்சி செய்துவருகிறோம்.
2 புராணக் கதைகள்
பைபிள் கதைகள் ஆரம்பம் முதலே மனிதத்தன்மையுடன் இருக்கின்றனவா?
ஆரம்பகால பைபிள் கதைகள் மிகப்பழமையானவை.
சுமார் 15 000 பகுதிகள் ஏறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் இருந்த்தாக்க் கண்டுபிடிக்கப்பட்டவை.
அந்த்த் தரவுகளிலிருந்து பெறப்பட்ட கதைகள், பைபிளின் முதல் புத்தகத்தில் பெறப்பட்ட ஆரம்பகால கதைகளுடன் பெருமளவில் ஒத்துப்போகின்றன.
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏராளமான புராதன இடங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
அங்கு பைபிளில் குறிப்பிடப்பட்ட ஏராளமான விடயங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
3 ஒருங்கிணைவும் தொடர்ச்சியும்
நாங்கள் தெய்வீக சுநத்திரத்தைக் கண்டடைய முடியுமா? ஒருங்கிணைவும் தொடர்ச்சியும் பைபிளில் இருக்கின்றனவா?
பைபிள் என்பது 66 புத்தகங்களில் தொகுப்பாக 40 வரையானவர்களால் 1500 ஆண்டுகளாக எழுதப்பட்டிருக்கிறது.
அது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளாக, இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான அனைத்துப் புத்தகங்களுக்கும் இடையில் மிகக்குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒதத்தன்மையும் தொடர்ச்சியும் இருக்கின்றன.
நாங்கள் பழைய ஏற்பாட்டில் ஆதி மனிதர்கள் எப்படி அளவிடமுடியாத புனிதமான கடவுளுடனான வாழ்வைத் தொலைத்தார்கள் என்பதை வாசிக்கமுடியும்.
அத்துடன், நாங்கள் 60 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்களில் மீட்பர் குறித்த கருத்துக்களையும் பார்க்க முடிகிறது.
அவரே நாங்கள் கடவுளுடன் கொண்டிருந்து இழந்த நெருக்கத்தை மீட்டுத்தர வந்தவர்.
இந்த விளக்கமான தீர்க்கதரிசனங்கள் அவருடைய வாழ்க்கையின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரையான அனைத்தையும் முழுமையாக விபரிக்கின்றன.
இவ்வாறு குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களும் மீட்பருக்கான அடையாள அட்டையாக விபரமாகக் காணப்படுகின்றன.
பேராசிரியர் ஸ்டோனர், ஒரு மனிதன் 8 முக்கியமான தீர்க்கதரிசனங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற நிகழ்தகவைக் கணிப்பிட்டுள்ளார்.
அதற்கான நிகழ்தகவு 1017 இல் 1 ஆகும். அதாவது 100.000.000 x 1.000.000.000. இல் 1 என்பதாகும்.
மனிதர்களுக்கு இவ்வாறான ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவுசெய்யும் சாத்தியம் இருக்காது. ஆனால் யேசு கிறிஸ்துவால் முடிந்தது.
மீட்பர் குறித்தான பல்வேறு தீர்க்கதரிசனங்களை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அவை உரைக்கப்பட்டு சுமார் 600 வருடங்களுக்குப் பின்னரே யேசு கிறிஸ்து பிறந்தார்.
அத்துடன் பழைய ஏற்பாடானது கிறிஸ்துவுக்கு முன் 2ம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டு கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
இதனால் புதிய ஏற்பாடு, ஏன் யேசு கிறிஸ்து உண்மையான யூதர்களின் மீட்பர் என்பதை விளக்குகிறது.
அவர் பழைய ஏற்பாட்டில் முக்கியமான தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்தினார்.
அவரே ஒரேயொரு சட்டப்படியான மீட்பர்.
4. உண்மை.
இந்த நிகழ்வுகள் பைபிள் உண்மையானது என்பதை சுட்டிக்காட்டுகின்றனவா?
இத்துடன் பகுதி 3a நிறைவுபெறுகிறது.
இப்போது நீங்கள் பகுதி 3b இல் “உண்மை மதம் மற்றும் ஆன்மீக வாழ்வின் குறியீடு” என்ற தலைப்பில் வேறுபட்ட பகுதிகளை பார்க்கப்போகிறீர்கள்.
உண்மை மதம் மற்றும் ஆன்மீக வாழ்வின் குறியீடு.